Friday, October 15, 2010

நவராத்திரி

அதாவது அறியாமை இருளில்.  அறியாமை இருளை நீக்கி ஞான ஒளியை உள்ளத்தில் பரவச் செய்வதுதான் நவராத்திரி பூஜை. இவ்வாறு ஒன்பது இரவுகள் முடிந்து பத்தாவது நாளான விஜயதசமி வருகிறது. இங்கே " விஜயம்" என்பது வெற்றியை குறிக்கும். இது சாதாரண விஜயமல்ல; மனதின் பலவீனங்கள் மற்றும் எல்லைகளின் சங்கிலியை உடைத்து, பரிபூரண சுதந்திரம் ஏற்படும் விஜயமாகும்.
"நவம்"  என்ற வார்த்தைக்கு புதியது என்றும் பொருளுண்டு. மனதின் பாபங்கள் எல்லாவற்றையும் கழுவி சுத்தம் செய்யும் போது புதிய பிறவி கிடைக்கிறது-- அது ஒரு மறு பிறவி. இந்த உடல் பராசக்தியின் வாசஸ்தலமாகும். 


நவராத்திரி பூஜையின் முதல் மூன்று தினங்கள் சிம்மவாகினியான துர்க்கையை வழிபடுகிறோம். துர்க்கை சக்தியே வடிவான  உக்கிரமூர்த்தி. துர்க்கையை வழிபடுவது நம்முடைய உள்ளத்திலுள்ள விருப்பு, வெறுப்புக்கள், ஆசை, கோபங்கள் ஆகியவற்றை அழிப்பதற்காகவே ஆகும். சக்தி இருந்தால்தான் மனஉறுதி வரும். அப்போதுதான் நம் உள்ளத்திலுள்ள எதிரிகளை அழிக்க முடியும். மனம் சலனமுற்று இருக்கும்போது பிறக்கும் சக்தியே துர்க்கை. தேவியின் கையிலுள்ள வாள் வைராக்கியத்தின் சின்னமாகும். அது ஞான வாள். இறைவனை அறிவதற்கான தீவிரமான தாகமே வைராக்கியம். அந்த வாளால்தான் மனதின் அசுரகுணங்களை அழிக்க முடியும்.  மஹிஷாசுரனை தேவி அழிப்பதன் தத்துவம் இதுவே ஆகும். உண்மையில் துர்க்காதேவியை வழிபடுவதன் மூலம் நம்முடைய அகத்திலுள்ள சக்தியையே நாம் விழிப்படையச் செய்கிறோம். அந்த சக்தி விழிப்படைந்தால்தான் மனதின் பலவீனங்களை போர் செய்து தோல்வியுறச் செய்ய முடியும்.

இவ்விதம் ஆத்மசக்தியால் தீயவாசனைகளை அகற்றிவிட்டால் அடுத்தபடியாக நற்குணங்கள் உள்ளத்தில் நிறையும். அதற்காகவே அடுத்த மூன்று தினங்கள் ஐஸ்வர்யத்தின் சின்னமான லக்ஷ்மியை வழிபடுகிறோம். லக்ஷ்மி பூஜையின் மூலம் அன்பு, கருணை, இரக்கம், தானம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற தெய்வீக செல்வத்தைப் பெறவேண்டும்.

மன மாசுகளை அகற்றி, அங்கே நற்குணங்கள் தோன்றிவிட்டால் பின்னர் ஞானம் உதயமாகும். அதனால்தான் கடைசி மூன்று தினங்களில் வித்யா வடிவான சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம். நவராத்திரியின் கடைசி மூன்று தினங்கள் தொழிலாளியும், முதலாளியும், பண்டிதரும், பாமரரும், பணக்காரரும், ஏழையும், ஆசிரியர்களும், மாணவமணிகளும்  தாங்கள் வேலை செய்யவும், படிக்கவும் உபயோகிக்கும் ஆயுதங்களையும், புத்தகங்களையும் பூஜைக்கு வைக்கிறார்கள். ஜப, தியானங்களுடன் இந்த நாட்களை செலவிடுகிறார்கள்.

அனைத்தையும் அதாவது உயிருள்ள, உயிரற்ற பொருட்களை இந்நாட்களில் வழிபடுகின்றனர். பத்தாவது நாள் விஜயதசமி. இதை தசரா என்றும் சொல்வர். தச, பாப, ஹர என்பதே இதன் பொருள். பாத்து பாபங்களை அழித்தல். அதாவது ஐந்து ஞானேந்திரியங்களின் மூலமும், ஐந்து கர்மேந்திரியங்களின் மூலமுமே மனம் உலகியல் சுகங்களை அனுபவிக்கிறது. அதனால் தான் எங்கும் நிறைந்துள்ள இறைவடிவை நம்மால் உணர முடியவில்லை. வெளிமுகமாக நிற்கும் இந்த பத்து இந்திரியங்களே தசபாபங்களை செய்கிறது. அதை அழித்து, ஞானத்தின் வெற்றியைப் பெறும் நாளே விஜயதசமியாகும்.  அறிவின் அட்ஷுரதத்தை  அழிவற்ற பராசக்தியை அனைவரும் வணங்குகின்றனர். முதல் அட்ஷுரங்களான "ஹரி,  ஸ்ரீ"  எழுதி குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் எல்லையற்ற அறிவின் முன்னால் சிறு குழந்தைகள் ஆகின்றனர். இதை எப்போதும் நினைவுகூர  முடிந்தால் வாழ்க்கை பொருளுள்ளதாகும். சக்தி வடிவான தேவி நமக்கு வெற்றியை வழங்குவாள். வையகம் சிறக்கும்.  எல்லோரும் சக்தியின் அருள் பெற்று வாழ்க வளமுடன்!!

Sunday, June 7, 2009

கண்ணகை அம்மன் ஆலய ஊர்வலம்



































தம்பிலுவில் ஸ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் ஆலயம்





 
Srilanka,temple,ampara,batticaloa,thambiluvil,thirukkovil,